எப்போதும் அன்பு மற்றும் பாசத்தை கேட்டு பெறக் கூடாது அவ்வாறு நாம் ஒருவரிடம் அதனை கேட்டு பெறுவதில் எவ்வித வளமும் இல்லை அதேபோல் நம்மை ஒருவர் அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை கேட்காமல் அவர்களை விட்டு ஒதுங்கி நிற்பது தான் நல்லது..
அவர்கள் நமது உறவினர்கள் நண்பர்கள் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் ஒதுங்கி விடுங்கள். மௌனத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை என்பது நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ள ஒரு பெரும் உண்மை என்பதை மறவாதீர்கள். நம்மை அலட்சியப்படுத்தும் நபர்களை நாம் எதிர்கொள்ள கற்றுக் கொண்டால் வீணாக நாம் மன உளைச்சல் இல்லாமல் இருந்து கொள்ளலாம் ஒதுங்கிக் கொள்வது என்பது நம்மை அலட்சியம் செய்பவர்கள் தங்களது தவறை தாங்களே புரிந்து கொள்வதற்கு சந்தர்ப்பத்தை நீங்களே கொடுக்கும் நிலை. உங்களை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொண்டு அதனால் நீங்கள் படும் கவலையை கண்டு சந்தோஷம் அடையும் நபர்களிடம் இருந்து நிரந்தரமாக ஒதுங்குவது உங்களுக்கு நல்லது இதுபோன்ற வன்மம் கொண்டவர்கள் என்றுமே நல்லவர்களாக உங்களுக்கு இருக்க மாட்டார்கள். நம்மை அலட்சியப்படுத்துபவர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்களாக கூட இருக்கலாம் ஆனால் அதற்காக அவர்களை எதிர்பார்ப்பது என்பது தேவையில்லை அவர்களுக்கு நம்முடன் நட்பாக நெருக்கமாக இருக்க தகுதி இல்லை என்று எண்ணிக்கொண்டு விலகி நில்லுங்கள். ஒருவேளை நாம் செய்த ஏதேனும் சில விஷயங்கள் அவர்களை காயப்படுத்தி இருக்கலாம் ஆனால் அந்த தவறை நமக்கு அவர்கள் சுட்டிக் காட்டி இருந்தால் நாம் அதனை திருத்திக் கொண்டிருப்போம் அதனை விடுத்து அலட்சியப்படுத்தி நம்மை ஒதுக்க நினைத்தது அவர்களது தவறு என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் சிலர் நமது வளர்ச்சியை கண்டு அவர்களால் முன்னேற முடியவில்லை என்னும் பொறாமை காரணமாக இவ்வாறு நடந்து கொள்வார்கள். அது அவர்கள் நமக்கு செய்யும் நல்ல காரியம் என்று எடுத்துக்கொண்டு உங்கள் கவன முழுவதையும் உங்கள் முன்னேற்றத்தின் மீது செலுத்துங்கள். ஒரு கட்டத்தில் அவர்களே உங்களை ஏதேனும் தேவைக்காக அல்லது உதவிக்காக தேடி வந்தால் உங்களால் முடிந்த உதவியை செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். அவர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பினையும் வைத்துக் கொள்ளாதீர்கள்…!!