இன்றைய காலகட்டத்தில் நம்முடைய வாழ்க்கை முறையில் கொண்டு வர வேண்டும் என்ற நிலைமை தான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் நோய் தான். இளம் வயது மரணங்கள் என நடந்து கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் என்னதான் காரணம் என்று யோசித்துப் பார்க்கும்போது வாழ்க்கை முறை தான் சுட்டிக்காட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
அனைத்திற்கும் காரணம் இந்த ஃபாஸ்ட் ஃபுட் மோகம் தான். நம் முன்னோர்கள் பாரம்பரியமான சிறுதானிய உணவுகளை அளவோடு சாப்பிட்டு நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது சாப்பிடுவதற்கு கட்டுப்பாடே இல்லை. இது போல போன் வந்தது தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் உண்டாகி இருக்கிறது. அன்றாடம் நம் கடைபிடிக்கும் சில பழக்கங்கள் நமக்கே தெரியாமல் மெதுவாக நம்மை சாகடிக்கிறது. அந்த பழக்கங்கள் என்ன அதனால் என்ன ஆபத்துகள் என்பதை பற்றி இனி காண்போம்.
முதலாவதாக கூறப்படுவது சிறுநீரகத்தை அடக்குவது. நாம் வெளியில் செல்லும்போது வேலை பரபரப்பிலோ ஒரு சிலர் சிறுநீர் செல்லாமல் அடக்கி வைத்துக் கொண்டே இருப்பார்கள். அது போல் இருக்கவே கூடாது. சிறுநீரை அடக்குதல் பலவித நோய்களுக்கு வழிவகுக்கும்.
அடுத்ததாக போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பது. தினமும் குறைந்தது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். எவ்வளவுதான் வேலை இருந்தாலும் இதற்கும் நேரம் எடுத்து செய்ய வேண்டும். பலர் தண்ணீர் குடிப்பதே மறந்து விடுவார்கள். சாப்பிடும் போது மட்டும் தான் தண்ணீர் அருந்துவார்கள். நன்றாக தண்ணீர் குடிக்கும் போது தான் நம் உடம்பில் இருக்கும் நச்சு கழிவுகள் எல்லாம் வெளியேறி ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்றாவதாக நாம் தூங்கும் பொழுது பலர் தலையணைக்கு பக்கத்தில் போனை வைத்துவிட்டு தூங்குவார்கள். போனில் உள்ள கதிர்வீச்சுகள் நம் உடலையும் தாக்கும். அதுக்கு அப்புறம் தூங்குவதற்கு முன்பு போனை தூரமாக டேபிளிலோ செல்ஃபிலோ வைத்துவிட்டு தூங்குங்கள். தலையணைக்கு பக்கத்தில் போனை வைத்துக்கொண்டு தூங்கக் கூடாது.
நான்காவதாக சொல்லப்படுவது நேரத்தில் தூங்காமல் இருப்பது. போனை பார்த்துக் கொண்டு ஒரு சிலருக்கு நேரம் போவதே தெரியவில்லை. 12 மணி ஒரு மணி இரண்டு மணி வரைக்கும் தூங்காமல் போனை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே போன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். அந்த மாதிரி இருப்பதும் நம்மை மெதுவாக நம் உடல் நிலத்துக்கு தீங்கு விளைவித்து மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 9 மணி 10:00 மணிக்குள் தூங்கி விட வேண்டும். அதே நேரத்தில் கடைப்பிடித்து வரவேண்டும். நேரம் கழித்து தூங்குவதும் அதிக அளவில் நேரம் கழித்து எழுவதும் உடலுக்கு நல்லதல்ல.
கடைசியாக நம் உடலை கெடுதல் விளைவிக்கும் ஒரு பழக்கம் ஹெவி டின்னர் எனப்படும் அதிகப்படியான இரவு உணவு சாப்பிடுவது. நம் இரவு நேர உணவு பொதுவாக லைட்டாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது வரைமுறையே இல்லாமல் இரவு நேரத்தில் பரோட்டா பிரியாணி தந்தூரி சிக்கன் பீசா பர்கர் என சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது மாதிரி அதிக கலோரி கொண்ட உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. இரவு உணவு பொதுவாக இட்லியோ, தோசையோ சாலடுகளோ அதுபோன்று லைட்டான ஃபுட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து பழக்கங்களும் நம்மை மெதுவாக சாகடிக்க கூடியது நம் உடலில் தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனால் இந்த ஐந்து பழக்கங்களையும் உடனடியாக மாற்றி விட்டால் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.




