உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள், உங்களிடம் திரும்பி வந்தால் இதை செய்து விடுங்கள்..!!

😊உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள், உங்களிடம் திரும்பி வந்தால் இதை செய்து விடுங்கள்.

கூனிக் குறுகட்டும் உங்களை ஒதுக்கியவர்கள்.

👉தனிமை எதை புரிய வைக்கிறதோ இல்லையோ. இவ்வளவு நாள் எவ்வளவு பெரிய முட்டாளாய் நாம் இருந்திருக்கிறோம் என்பதை புரிய வைக்கும்.

👉நம்மை தேவைக்கு பயன்படுத்துபவர்களைத்தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.

👉வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும். யாரையும் நம்பித்தான் இருக்கக் கூடாது.

👉உங்களை வேண்டாம் என்று விலகியவர் திரும்பி வரும்போது, திரும்பிக்கூட பார்க்காமல் செல்லும் அளவிற்கு மன தைரியமும், திமிரும் இருக்கவேண்டும் உங்களுக்கு.

👉உரிமை உண்டு என எண்ணினாலும் நமக்கு மரியாதை இல்லை என தெரியும்போது, ஒதுங்கி இருப்பதுதானே நல்லது. ஒதுங்கியே இருங்கள். வாழ்வில் சிறந்த மாற்றம் வரும்.

👉ஆயிரம் பேரைக்கூட எதிர்த்து நில்லுங்கள் பரவாயில்லை. ஆனால் எப்போதும் ஒருவரைகூட எதிர்பார்த்து நிற்காதீர்கள். நினைக்காத பொழுதுகளில் ஏமாற்றம் தந்து விடுவார்கள்.

👉யாரிடமும் உங்கள் வலியை பகிர்ந்து கொள்ள நினைக்காதீர்கள். நம்மிடம் சொல்லிவிட்டு அடுத்தவர்களிடம் நம்மைப் பற்றி சிரித்து மகிழும் உறவுகள் வாழும் உலகம் இது.

👉யார் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காதீர்கள். நம்பிக்கை உடையும் போது உள்ளமும் உடைந்துதான் போகும்.

👉உங்களை விட்டுச் சென்றவர் திரும்பி வரலாம். ஆனால் திருந்தித்தான் வருகிறார் என்று ஒரு போதும் நம்பி விடாதே. மீண்டும் ஒரு ஏமாற்றத்தை உன் மனம் தாங்காது.

Read Previous

ஒரு குடும்பத் தலைவியின் சரவெடி புலம்பல்..!!

Read Next

பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்த 24 வயது இளைஞர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular