கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுர பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டவர் புதுச்சேரி. கள்ளக்குறிச்சி. விழுப்புரம் சேலம் ஆகிய பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் பலர் அது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “ரத்த உறவுகளை இழந்து வாடும் சொல்லாத துயரத்தில் கர்ணாபுரம் மக்கள் இருக்க அவர்களை நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடாமல் தனியாக அமர வைத்து வாரிசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து போட்டோ சூட் நடத்துவதற்காக காக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏழை எளிய மக்களின் வலி ,வேதனைகளை பட்டத்து இளவரசராக தன்னை பாவித்து வாழும் உதயநிதி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. மக்களின் இந்த காத்திருப்பு வேதனையோடு சேர்ந்து ரௌத்திரத்திற்கு உங்கள் அதிகார கொட்டம் அடக்கியே ஆக வேண்டும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.