உங்கள் உடலில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்துள்ளதா..? இந்த மூலிகையை கொதிக்க வைத்து குடித்து பாருங்கள் உடனடி தீர்வு..!!

நமது உடலில் உள்ள கழிவுகள் அவ்வப்போது உடலை விட்டு மலம். சிறுநீர் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றினால் தான் நம் உடல் ஆரோக்கியமானதாகவும் நோய் நொடி இன்றி இருக்க முடியும். ஆனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றாமல் உடலிலேயே தங்கிவிட்டால் அது உடலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

மேலும் உள் உறுப்புகளுக்கும் பிரச்சினையை விளைவிக்கும் இந்த உடல் கழிவுகளை எளிதில் வெளியேற்ற ஒரு சில மூலிகைகளை நாம் தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தும் மலம் வழியாக சில நிமிடத்தில் வெளியேறிவிடும். இது குறித்து இப்பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்

  1. கடுக்காய் பொடி
  2. ஓமம்
  3. துத்தி இலை பொடி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கடுக்காய் பொடி, ஓமம், துத்தி இலை பொடி ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின் துத்தி இலை பொடி இல்லை என்றால் பச்சை துத்தி இலையை சேர்த்துக் கொள்ளலாம். நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

இந்த மூலிகை தண்ணீரை தினமும் காலையில் டீ அல்லது காபிக்கு பதிலாக குடித்து வருவதால் உடலில் உள்ள கழிவுகள் மலம் வழியாக வெளியேறும்  என்று  சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூலிகை தண்ணீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து எளிதில் குணமடைய முடியும்.

Read Previous

முதன்முதலாக அம்மாவாகியுள்ள பெண்களுக்கு சிறப்பு டிப்ஸ்..!!

Read Next

மாம்பழ பிரியர்களா நீங்க..? ரசாயனம் சேர்த்து பழுக்க வைத்த மாம்பழத்தை எவ்வாறு கண்டறிவது..? வாருங்கள் தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular