உங்கள் உடலில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுகிறதா..? அப்பொழுது இதை பயன்படுத்தி பாருங்கள்..!!

ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் உடம்பில் அதிகப்படியான துர்நாற்றம் விசுகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நாமும் பல வாசனை திரவியங்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் வாசனை திரவியங்கலால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர நிரந்தர தீர்வாய் அமையாது.

எனவே 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய நலங்கு மாவு தயாரித்து உடலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் இருந்து வெளியேறும் கெட்ட வாடை நீங்கும்.

தேவைப்படும் பொருள்கள்

  1. கடலைப்பருப்பு
  2. பாசிப்பருப்பு
  3. வசம்பு
  4. ரோஜா மொக்கு
  5. சீயக்காய்
  6. அரப்புத்தூள்
  7. வெட்டிவேர்
  8. விலாமிச்சை  வேர்
  9. நன்னாரி வேர்
  10. கோரைக்கிழங்கு
  11. பூலாங்கிழங்கு
  12.  கஸ்தூரி மஞ்சள்
  13. மஞ்சள்
  14. ஆவாரம் பூ
  15. வெந்தயம்
  16. பூந்தி கொட்டை

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பொடி ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவு நலங்குமாவு மற்றும் காய்ச்சாத பால் தேவையான அளவு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்னர் இதை உடம்பில் துர்நாற்றம் வீசும் பகுதிகளில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து உபயோகித்து வந்தால் உடலில் வீசும் துர்நாற்றம் அகலும்.

Read Previous

கோவிட் – ஒமிக்ரான் XBB இன் அறிகுறி மற்றும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழி..!!

Read Next

வெரிகோஸ் வெயின் நோயால் கஷ்டப்படுகிறீர்களா..? இந்த இரண்டு பொருளை வைத்து வெரிகோஸ் வெயின் நோயை விரட்டலாம் வாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular