
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால் என்ன நடக்கும் தெரியுமா அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
நம் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன்கள் உள்ளன அவற்றில் மிக முக்கியமான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன். ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது..
வறண்ட சருமம் ; ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது உங்கள் சருமம் வறண்டு போக வாய்ப்பு உள்ளது தோல் வறண்டு போய்விடும் வறட்சி ஏற்படும்..
முடி மெலிந்து உதிர்ந்து போதல் : ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது முடி மெலிந்து உதிர்ந்து போக வாய்ப்பு உள்ளது ஏனெனில் முடி வளர்ச்சி ஈஸ்ட்ரோஜன் அளவோடு இணைந்தது..
இரவில் வியர்த்தல்; மாதவிடாய் நிறுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சனை ஏற்படுலாம். ஈஸ்ட்ரோஜன் குறைந்த பெண்கள் திடீரென வெப்பம் மற்றும் இரவு நேரத்தில் வியர்வை சந்திக்கலாம்.
சோர்வு ஏற்படுதல் ; குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவு உங்களை சோர்வாக வைக்க வாய்ப்புள்ளது நாள் முழுவதும் மந்தமாகவும் சோர்வாகவும் நீங்கள் உணர்வீர்கள்..
வயிற்றில் எடை போடுதல் ; குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவு கொழுப்பு விநியோகத்தை பாதிக்க வாய்ப்புள்ளது இதனால் வயிற்று பகுதியில் எடை போட அதிக வாய்ப்புள்ளது..
எலும்புகள் பலவீனமாதல் : ஈஸ்ட்ரோஜன் தான் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது எலும்பு அடர்த்தி குறையும் இதனால் எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோராசிஸ் பிரச்சனை ஏற்படலாம்.
கண்கள் மற்றும் வாய் வறண்டு போதல் ; ஈஸ்ட்ரோஜன் அளவு உங்கள் கண்கள் மற்றும் வாய்ப்பகுதியை வறண்டு போக செய்யலாம் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஒழுங்கற்ற மாதவிடாய் ; ஈஸ்ட்ரோஜன் தான் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கு படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம்..!!