ரத்த உறைவு என்பது சாதாரணமாக நம் உடம்பில் நடக்கும் ஒரு விஷயம் தான். ஆனால் இது காரணம் இல்லாமல் உடலில் நடந்தால் பல நோய்களுக்கு இது வழிவகிக்கும். பக்கவாதம் மாரடைப்பு அல்லது ஆழமான நரம்பு ரத்த உறைவு போன்ற உயிர் பறிக்கும் பாதிப்புகள் நேரிடும். இதற்குக் காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான். எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தேவையில்லாமல் ரத்த உறைவு ஏற்படும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
முட்டை மற்றும் சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிட்டால் ரத்தம் உறைவு அதிகமாக நடக்கும். அதில் இருக்கும் கொழுப்பு இதற்கு காரணமாக அமைகிறது. அதிகப்படியாக சர்க்கரை மற்றும் சர்க்கரை பானங்களை குடிப்பதனால் ரத்தத்தில் உறைவு ஏற்படுகிறது. இதனால் கட்டிகள் கூட உருவாகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுத்தரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால் இந்த பிரச்சனை நிச்சயமாக ஏற்படும். இது மட்டுமில்லாமல் அதிகப்படியாக மது அருந்தினால் ரத்த உறைவு தேவையில்லாமல் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகையால் இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகிப்போம்.




