நம் அனைவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். என்னதான் உடற்பயிற்சி கடுமையாக செய்தாலும் சிலருக்கு அது குறையாமலே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிலர் வீட்டிலேயே சுலபமாக உடலை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
காலை எழுந்தவுடன் காபி குடிப்பதற்கு பதிலாக இஞ்சி சாறு அல்லது எலுமிச்சை சாறு குடிக்கலாம். இவை நமது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் வழர்சதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. காலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது ரத்தத்தின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. கொழுப்பை வேகமாக கரைக்க இவை நிச்சயம் உதவும். காலையில் நாம் சாப்பிடும் உணவில் புரதம் அதிகமாக இருக்க வேண்டும். சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
காலையில் தினமும் சூரிய ஒளியை பெறுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளியில் வைட்டமின் டி அதிகமாக இருக்கிறது. காலை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடந்தால் உடல் எடை நிச்சயமாக குறையும். மன அழுத்தத்தை குறைப்பதற்கு தினமும் காலையில் தியானம் செய்வது மிகவும் நல்லதாகும். தியானம் செய்தால் நமது கொழுப்பும் மிக சுலபமாகவே கரைந்து விடும்.




