உங்கள் உடல் பிட்டா இருக்க வேண்டுமா..? அப்போ இந்த பீட்டர் ஜூஸை செய்து குடித்து பாருங்கள்..!!

நமது உடலுக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கினை வைக்கின்றது, பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகள் செய்து கொண்டு வரும் பழக்கம் நமது வழக்கத்தில் உள்ளது. அதிலும் ஜூஸ் செய்து பருகினால் உடல் எடை மளமளவென என குறையும்.

இந்த பீட்ரூட் ஜூஸில் அதிக அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதங்கள், இரும்புச் சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கின்றது. உடல் எடையை மளமளவென என  குறைக்க தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவது மிக நன்று.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவி செய்கிறது. உடல் எடை அதிகரிக்க காரணம்

  1. ஜீன் அமைப்பு
  2. துரித உணவு
  3. எண்ணெய் உணவு
  4. உடல் உழைப்பு இல்லாமை
  5. உடற்பயிற்சி இல்லாமை

பீட்ரூட் செய்வது எப்படி..?

பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1.  பீட்ரூட் 1
  2. தேன்தேவைக்கேற்ப
  3. எழுமிச்சம்பழம் ஒன்று
  4. இஞ்சி ஒரு துண்டு

செய்முறை

பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகள் சுவைக்கேற்ப தேன், இஞ்சி சிறு துண்டு மற்றும் ஒரு முழு எலுமிச்சையின் சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு டம்ளர் எடுத்து அவற்றை ஒரு வடிகட்டி பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் இந்த பானத்தில் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தோம் என்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.

Read Previous

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா..? இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்..!!

Read Next

உங்களுக்கு அடிக்கடி மூச்சுப்பிடிப்பு ஏற்படுகிறதா..? அப்போ இதை கண்டிப்பாக ஒரு முறை செய்யுங்கள்..!! உடனடி பலன் கிடைக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular