நமது உடலில் ஈரப்பதம் தேவையான அளவு இல்லை என்றால் நமது உதடு வறண்டு போய் காட்சியளிக்கும். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும் காரணமாக இருக்கலாம். ஆகையால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை நாம் சாப்பிட்டாலே உதட்டு கருமை சரியாகிவிடும்.
கற்றாழையில் இருக்கும் ஜெல்லை எடுத்து உதட்டில் தடவி பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். அதுமட்டுமில்லாமல் பாதாம் எண்ணையை தினமும் உதட்டில் தடவி வரலாம். பாலின் கிரீம்முடன் பாதாம் பருப்பின் பொடியை கலந்து உதட்டில் தடவி இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
மேலும் மாதுளை சாற்றினை தினமும் இரவில் தூங்கப்போவதற்கு முன்பு உதட்டில் தடவ வேண்டும். எலுமிச்சை சாறை உதட்டில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட்டு லிப் பாம் போட்டுக் கொள்ளுங்கள். தயிரை தினமும் உதட்டில் தடவி மசாஜ் செய்து கழுவி விட்டால் போதும்.
உதடு வறட்சியை போக்குவதற்கு வெண்ணையை தடவி வரலாம். சர்க்கரை உடன் தேன் கலந்து உதட்டில் தடவி வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். இப்படி எல்லாம் செய்தால் நமது உதடு வறண்டு போய் கருப்பாக இல்லாமல் இருக்கும்.




