
நாம் இரவில் தூங்கும் போது ஒரு சிலருக்கு கனவு என்பது இயல்பாகவே வரும். ஒரு சிலருக்கு நல்ல கனவுகள் வரும் ஒரு சிலருக்கு கெட்ட கனவுகள் பயமுறுத்தும் வகையில் வரும். அவ்வாறு வரும் கனவுகளில் ஒரு சில கனவுகள் தான் ஞாபகத்தில் இருக்கும் ஒரு சில கனவுகள் ஞாபகத்திற்கு வராது. ஆனால், அடுத்த நாள் அந்த கனவின் தாக்கம் நம்மிடையே இருக்கும். சில பேருக்கு கனவில் வந்தது பழித்து விடும். ஒரு சிலருக்கு எதிர் காலத்தில் வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கனவில் வந்து எச்சரிக்கும் வகையாகவும் ஒரு சில கனவுகள் அமையும். இந்த வகையில் குலதெய்வம் நம் கனவில் தோன்றினால் என்ன அர்த்தம் என்று தற்போது பார்க்கலாம்.
நாம் நம்முடைய குலதெய்வத்தை எக்காரணத்தைக் கொண்டு மறக்கவே கூடாது ஏனென்றால், ஒவ்வொருக்கும் இஷ்ட தெய்வங்கள் பல இருந்தாலும் குலதெய்வம் என்பது ஒன்றுதான் இருக்கும். குலதெய்வத்திற்கு அடுத்தது தான் இஷ்ட தெய்வங்கள் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் குலதெய்வம் நமது கனவில் வந்தால் என்ன பயன்கள் கிடைக்கும். குலதெய்வம் நமது கனவில் வந்தால் சுபா நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம். மேலும் தொழில் செய்பவர்களுக்கு கனவில் வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது என்றும் அர்த்தம். நிறைய சுபகாரியங்கள் நடக்கப்போகிறது என்று அர்த்தம். குறிப்பாக குலதெய்வத்தை சரியாக வழிபாடு செய்யவில்லை என்றாலும் குலதெய்வம் கனவில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.