உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் சொல்லுங்கள் : அப்புறம் பாருங்க நீங்க சொல்வதை அப்படியே கேட்பாங்க..!!

உங்கள் குழந்தைகளிடம் இதை மட்டும் சொல்லுங்கள் அப்புறம் பாருங்கள் நீங்கள் சொல்வதை அப்படியே கேட்பார்கள்….

நான் பெருமை கொள்கிறேன் : உன்னை எண்ணி நான் பெருமை கொள்கிறேன் குழந்தைகளுக்கு எப்போதும் உங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள். குறிப்பாக அவர்களால் அவர்களின் பெற்றோர் பெருமைப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் அவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்கள் இதை அவர்கள் பெற்றோர்களை கூறும்போது அவர்களுக்கு பெருமை மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும், நீங்கள் இதை குறிப்பிடும்போது நீ இன்று உன் நண்பனுக்கு உதவியது எண்ணி நான் பெருமை கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறுங்கள் இதனால் அவர்கள் பெருமை கொள்கிறார்கள்..

என்ன ஆனாலும் உனக்காக நான் இருக்கிறேன் : சில நேரங்களில் வாழ்க்கை குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான பிரச்சனைகளை கொடுத்து விடும் அப்போது அவர்களுக்கு எப்போதும் பெற்றோர் பாதுகாப்பாக அரணாக இருப்பார்கள் என்பதை உணர்த்த வேண்டும் இதனால் மாற்றம் கட்டாயம் ஏற்படும் எனவே அவர்களுக்கு நீங்கள் எத்தனை உறுதுணை என்பதை கூறிவிட்டால் போதும் அது அவர்களுக்கு சவாலான காலங்களில் உதவும் அவர்கள் எவ்வித விமர்சனம் நிராகரிப்பு என எதுவும் இன்றி சவால்களை எதிர்கொள்வார்கள்..

தவறு செய்வது நல்லது தான் : குழந்தைகள் எப்போதும் அவர்கள் பெற்றோரை ஏமாற்றமடைய செய்வது குறித்து அச்சமடைவார்கள் இதனால் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் ஏற்படுகிறது எனவே அவர்களின் தவறை அவர்கள் அறிய செய்வது நல்லது. மேலும் அது வாழ்வின் ஒரு அங்கம் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும், இதனால் அவர்கள் ஆபத்துக்களை தேர்ந்தெடுப்பதும் கற்றலின் அங்கம் என்றும் ஊக்கம் கொள்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையில் இருந்தும் நீ என்ன கற்றுக் கொண்டாய் என்பது முக்கியம் எனவே அங்கிருந்து முன்னேறி செல் என்று கூறுங்கள்..

நான் உன்னுடன் நேரம் செலவிட விரும்புகிறேன்..

அது விளையாட்டு அல்லது சும்மா அரட்டையோ அல்லது ஒரு சினிமா பார்ப்பதோ குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் செலவிடும் தரமான நேரத்தை அதிகம் விரும்புகிறார்கள் நீங்கள் அவர்களிடம் அவர்களுடன் நேரம் செலவிடுவது எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பதை அன்பாய் கூறுங்கள் இது உங்களின் பிணைப்பே வலுப்படுத்தும் உங்களுக்கு மதிப்பை தரும்…

என்னை மன்னித்துவிடு : பெற்றோர்களுக்கு மிகச்சிறப்பாக அனைத்தையும் செய்யக்கூடியவர்கள் அல்ல அவர்களும் தவறு செய்வார்கள் எனவே நீங்கள் தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்டால் அது உங்கள் குழந்தைகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும், அவர்களுக்கு பொறுப்பை கற்றுத் தரும் தவறுகள் செய்வது இயற்கை என்பதை புரிய வைக்கும் அதற்கான குற்ற உணர்வை சுமந்து கொண்டே இருக்க மாட்டார்கள் இது மரியாதையை விளக்கும் பாடமாகும்..

நீ என்ன நினைக்கிறாய் : உங்கள் குழந்தையின் கருத்து என்னவென்று அவர்களிடம் கேட்டால் அது உங்கள் குடும்பம் குறித்து திட்டமிட உங்களுக்கு உதவும். குறிப்பான அன்றாட தேர்வுகளில் அவர்களிடம் நீங்கள் கருத்து கேட்கும் போது அது அவர்களுக்கு மதிப்பை தரும் இதனால் அவர்களையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள் இதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும்…!!!

Read Previous

ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா இப்படி ஒரு மசாஜ் செய்து பாருங்கள்..!!

Read Next

வாய்விட்டு சிரிக்க இத்தனை ஜோக்குகளா : கொஞ்சம் படிச்சு தான் பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular