உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன?..

பல குழந்தைகளின் ஹேர் ஸ்டைல் பெற்றோரைப் போலவே இருப்பதை நாம் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும். அப்படியெனில், பெற்றோரின் தங்கள் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது. என்னதான் முக்கியப் பிரச்னையாக இருந்தாலும்கூட குழந்தைகளின் முன் சண்டை போடாதீர்கள்.

இதனால் குழந்தைகள் சண்டைக்கு காரணமான விஷயம் புரியாததாலும் உங்களின் ரியாக்‌ஷன்களாலும் பயப்படுவர். கோபத்தில் நீங்கள் உதிர்க்கும் கெட்ட வார்த்தைகளைத் தெரிந்துகொள்வர். நம்ம பொண்ணு/பையன் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய உரையாட வேண்டாம். ஏனெனில், அதை நன்கு புரிந்துகொண்ட குழந்தை எனில், அதனுடைய அடிப்படையான பொருள்களைக்கூட உங்களிடம் கேட்க கூச்சப்படும். அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

உங்கள் மூலமாகத்தான் உறவினர்களின் அருமைகள் குழந்தைகளுக்குத் தெரியவரும். அந்த உறவினர்களின் முன் நல்லபடியாகப் பேசிவிட்டு வீட்டில் திட்டினால் குழந்தைக்கு உறவினர் பற்றி மட்டுமல்ல, பெற்றோரைப் பற்றியும் நல்ல எண்ணம் வராமல் போய்விடும். உங்களுக்கு நெருக்கமாக தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நோய் எனில், அதைப் பற்றி விரிவாக குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள். வாழ்க்கை என்பதில் வெற்றியைப் போலவே தோல்விகளும் வரவே செய்யும். அப்போது இடிந்துபோவது இயல்பு. ஆனால், அதை குழந்தைகள் முன் செய்யாதீர்கள்.

உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். குழந்தைகள் டிவி பார்க்கிறது… மொபைலில் என்னவோ விளையாடுகிறது என்று நினைத்துக்கொண்டு உடலுறவு தொடர்பான பேச்சு அல்லது சைகளைக் காட்டாதீர்கள். தேவையற்றதை வாங்காதீர்கள் – வீட்டுக்கே வந்து விற்கப்படும் பொருள்களில் இது தேவையில்லை… பின்னாளில் தேவைபடலாம் என நினைத்து ஒரு பொருளை குழந்தை முன் வாங்காதீர்கள். கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள். இது ரொம்பவுமே முக்கியமானது. ஒருவரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் ஒரு வித தாழ்வுமனப்பான்மை ஏற்படக்கூடும்.

Read Previous

டி20ல் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது – முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்..!!

Read Next

விளம்பரப் பலகை விழுந்து பலி.. நிவாரணம் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular