இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகம் இருக்கிறது, எவ்வளவுதான் முடிக்கு தேங்காய் எண்ணை மற்றும் ஆயுர்வேத வைத்தியங்கள் செய்து வந்தாலும் முடி கொட்டுவது என்பது நிற்பதில்லை, அதற்குக் காரணம் ரசாயனங்கள் கலந்த ஷாம்புகள் தான் என்று பலரும் கூறுகின்றனர்..
உங்களுக்கு கூந்தல் அடர்த்தியாக வளர வேண்டுமா இயற்கை முறையில் இந்த ஷாம்பை பயன்படுத்துங்கள் 30 நாட்களில் முடி உதிர்வு நின்று தலைமுடி கருமை நிறத்தில் வளரும், தேவையான பொருட்கள் பூந்திக்கொட்டை ஐந்து, சீகைக்காய் ஐந்து, நெல்லிக்காய் மூன்று, மேலும் பூந்திக்கொட்டை சீயக்காய் நெல்லிக்காய் துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு டம்ளர் நீரில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும், பிறகு மறுநாள் காலை அதை சூடாக்கி பின் ஆறிவிட்டு மிக்ஸியில் அரைத்து நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் அந்த நீரை ஷாம்பு போல தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும் அதேபோல் நுனிபிடிப்பிலவும் சரியாகிவிடும் மேலும் பொடுகு மற்றும் முடி நரைப்பது தவிர்க்கப்பட்டு கூந்தல் அடர்த்தியாக கருமையாக வளரும்..!!




