
உங்கள் சமையலை ஈசியாக்க கண்டிப்பா இந்த சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!
வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டிவிட்டு பின்னர் தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும். பாலேடு தயிர் ஏடுகளை பாட்டிலில் போட்டுக் குழுக்க வெண்ணை மற்றும் மோர் ஒரே நேரத்தில் கிடைக்கும். நமத்து போன பிஸ்கட்டை பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணியை சமைக்கும் போது விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியை தூக்கி எறிந்து விடாமல் அதை தோசைக்கு அரைக்கும் மாவோடு சேர்த்து அரைத்தால் மிருதுவான தோசை நமக்கு கிடைக்கும். முருங்கைக் கீரையை சமைக்கும் போது சிறிதளவு சர்க்கரையை கலந்து சமைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.