இன்றைய காலகட்டத்தில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை விட செயற்கை முறையில் கிடைக்கும் பொருட்கள் தான் அதிகம், இயற்கை உணவு முறைகளை கடந்து வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது நாம் சாப்பிட கூடிய உணவு முறைகள் பல கலப்படத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது இதன் மூலமாக உடலில் ஒவ்வாமை மற்றும் பல நோய்கள் வருகிறது..
இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா உணவுப்பொருட்களும் கலப்படம் நிறைந்ததாகவே இருக்கிறது கலப்படம் இல்லா பொருட்கள் கண்களில் தென்படுவதே இல்லை இதை பரிசோதிக்காமல் உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கும் இதன் மூலம் உடலில் நோய் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படுத்தும், உப்பு சர்க்கரையை சரிபார்க்க சில எளிய வழிகள் இங்கே உள்ளன ஒரு ஸ்பூன் உப்பு அல்லது சர்க்கரையை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து கலக்கும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் பொருட்கள் கலப்படமில்லை என்று அர்த்தம் சுண்ணாம்புத்தூள் சேர்ந்திருந்தால் தண்ணீர் சிந்து வெள்ளை நிறமாக மாறும் இந்த மாற்றத்தை வைத்து உப்பும் சர்க்கரையும் கலப்படமா கலப்படமற்றதா என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும்..!!