உங்கள் தலைக்குள் விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா..??

Oplus_131072

உங்களுக்குத் தெரியுமா..!!

உடலின் அனைத்து பாகங்களின் வலியையும் உணரும் மையம் மூளையாக இருந்த போதிலும் மூளை ஒருபோதும் வலியை உணராது.

மூளை தூங்குவதில்லை. இன்னும் சொன்னால் கண் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கும் போதுதான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும், உணரும், தொடும் மற்றும் சுவாசிக்கும் அனைத்தையும், நம் மூளை சேமிக்க வல்லது.

மூளை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மூளையின் வலது பகுதி உடலின் இடது பாகுதியையும், அதன் இடது பகுதி உடலின் வலது பாகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றன.

18 வயதோடு மூளை தனது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கிறது.

மூளைக்கு 8 தொடக்கம் 10 வினாடிகள் வரை இரத்த ஓட்டம் கிடைக்காவிட்டால் அது சுய நினைவை இழந்துவிடும்.

மூளைக்கு ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டால் 4 முதல் 6 நிமிடங்கள் வரை அது உயிர்வாழும், அதன் பிறகு அது இறக்கத் தொடங்கும். அதன் பிறகு மீட்கப்பட்டால் கூட அதன் பல பாகங்கள் சிதைந்திருக்கும்.

ஒருவரால் ஒருபோதும் அவரையே கூச்சப்படுத்திக்கொள்ள முடியாது.
மற்றவர்கள் நம் உடலை தொடுவதையும் நம்மை நாமே தொடுவதையும் மூளையால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும்.

மூளை சுயமாக தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் வல்லமை கொண்டது. மனித மூளையின் ஒரு பகுதிக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் மூளையின் பாதுகாப்பான பகுதி பாதிக்கப்பட்ட பகுதியின் செயற்பாடுகளை சுமந்து கொள்ளும்.

இப்போதாவது உங்கள் தலைக்குள்
விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா!!!

Read Previous

சுகரை சட்டுன்னு குறைக்கும் முருங்கை கீரை சட்னி… இந்த முறையில் செய்து கொடுங்க..!!

Read Next

விமானப்படையில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular