உங்கள் தேவையை பூர்த்தி செய்ய யாரையும் நம்பி இருக்காதீர்கள், யாரிடமும் கையேந்தாதீர்கள்..!!

நான் மரணம் வரும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன், உழைத்தே சாப்பிடுவேன் என்று இருங்கள் இந்த மனநிலை தான் உங்களுக்கு எப்போதும் தேவை.

 

உங்கள் தேவையை பூர்த்தி செய்ய யாரையும் நம்பி இருக்காதீர்கள், யாரிடமும் கையேந்தாதீர்கள்.

 

தைரியத்துடன் வேலை செய்து கொண்டே போங்கள் பொறுமையோடும், உறுதியோடும் வேலை செய்வது தான் வெற்றிக்கான வழி.

 

ஆடு,மாடு மேய்ப்பது முதல் அரசாங்கத்தின் மிக உயர்ந்த நிருவாகப் பணி வரை எல்லாவற்றிலும் பொது நன்மை கருதுகிற அக்கறை கலந்திருந்தால் நீங்கள் தான் ஆகச் சிறந்த உழைப்பாளர்.

 

எதற்காகவும் காத்திருக்காதீர்கள் உங்களால் முடிந்த நல்ல செயல்களைச் செய்து முடியுங்கள் யாரையும் நம்பி காலத்தை தொலைக்காதீர்கள்.

 

தேவை இல்லாத விசயத்தைப் பற்றி யோசித்து உங்கள் சக்தியைச் சிதற விடாதீர்கள் மாறாக அமைதியுடன் நல்ல செயலில் ஈடுபடுங்கள்.

 

உங்களிடம் போட்டி, பொறாமை இருந்தால் அதை உடனே விட்டு விடுங்கள் எதையும் பொறுத்துக் கொள்ளும் மன பக்குவத்துவதை வளர்த்துக் கொள்ளுங்கள் பொறுமையாக இருந்தால் உலகம் உங்கள் காலடியில் இருக்கும்.

 

இந்த வாழ்க்கை இருப்பது இன்னும் சில வருடங்களே அதனால் ஏதாவது ஒரு நல்ல லட்சியத்தை கொண்டிருங்கள் அதற்காக மட்டும் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.

 

மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் நினைக்கட்டும் நீங்கள் உங்களது ஒழுக்கத்தில் தவறாமல் இருங்கள் அதுவே உங்களை வெற்றி பெற செய்யும்.

 

யாரையும் தீயவன் என்று சொல்லி விடாதீர்கள் நீங்கள் நல்லவன் இன்னும் நல்லவனாக இருங்கள் என்றே சொல்லிப் பழகுங்கள்.

 

தைரியம் மிக்க இளைஞர்களே நீங்கள் அனைவரும் மகத்தான காரியத்தைச் செய்வதற்காக பிறந்துள்ளீர்கள் என்று நம்புங்கள்.

Read Previous

நண்பர்களே, மனைவியை புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமே..!!

Read Next

வெட்டிவேர் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular