உங்கள் தொண்டை கரகரப்பாக உள்ளதா..? இதை ட்ரை பண்ணி பாருங்க..!! தொண்டை கரகரப்புக்கு பாய் சொல்லுங்க..!!

நம்மில் பெரும்பாலானோருக்கு சளி பிடித்திருந்தால் நம் தொண்டை கரகரப்பு தன்மை கொண்டதாய் மாறும். ஒரு சில சமயங்களில் தண்ணீர் மாற்றி குடிக்கும் பொழுது கூட தொண்டை கரகரப்பாக மாறும். அதை போல் ஒரு சிலருக்கு திடீர் பருவநிலை மாற்றம் காரணத்தினால் சளி பிடித்து பின் தொண்டை கரகரப்பாகவும் மாறும்.

இதற்கு உடனே நாம் ஆங்கிலம் மருந்துகளை வாங்கி பயன்படுத்த தேவையில்லை. இந்த தொண்டை கரகரப்பு நீங்குவதற்கு இந்த பதிவில் இரண்டு மருத்துவ குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மருத்துவ முறை 1

தேவையான பொருட்கள்

  • பொடித்த பனங்கற்கண்டு
  • அதிமதுரப்பொடி
  • தேன்
  • பால்

செய்முறை

ஒரு டம்ளர் அளவில் பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுர பொடி, தேன் ஆகியவற்றை கலந்து நன்கு கலந்து பின் இதை அப்படியே குடித்தால் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும்.

மருத்துவ முறை 2

 தேவையான பொருட்கள்

  • சுக்கு
  • மிளகு
  • தேன்
  • திப்பிலி

செய்முறை

முதலில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் வறுத்து பொடி ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

Read Previous

கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்..!!

Read Next

பெண்கள் கர்ப்பமாக உள்ளார் என்பதற்கான 10 அறிகுறிகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular