
இன்றைய காலகட்டத்தில் பலரும் தொப்பை பிரச்சனையில் அவதிப்பட்டு வருகின்றனர், தொப்பை இருப்பதனால் தங்கள் அழகும் குறைகிறது என்று ஆண்கள் பலர் நினைப்பதும் வழக்கம், தொப்பையை குறைப்பதற்கு வீட்டிலிருந்தே சில எளிய முறைகளை பயன்படுத்தலாம்..
முதலில் ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் சீரகம் இவை இரண்டையும் கொதி நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் பின்பு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி ஒரு டம்ளர் விதம் ஒரு வாரம் குடித்து வர தொப்பை குறைய ஆரம்பிக்கும், இந்த மாற்றத்தை நீங்கள் உணர முடியும், அதேபோல் சுடுதண்ணீரை சாப்பிட்ட பிறகு குடித்து வருவதன் மூலம் உடலில் கொழுப்பு சேராமல் கரைவதற்கான வழிகள் அமையும், மேலும் தொப்பை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீர் சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அதன் மூலம் உடலில் நீராகாரம் பசியை தூண்டாமல் உடலை ஆரோக்கியமாகவும் சோர்வடையாமலும் வைத்திருக்கும் இதனால் தொப்பை குறைவது விரைவான செயலாக இருக்கும்..!!