நட்பை முடிவுக்கு கொண்டு வரும் காலகட்டம் : நட்பு எவ்வளவுதான் முக்கியமாக இருந்தாலும் அதில் பிரச்சனைகள் எழும் போது அதை முடிவுக்கு கொண்டு வருவது தான் நல்லது. அந்த வகையில் நச்சு கலந்த நட்பை எப்பொழுது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தெரிந்து கொள்ளுங்கள்…
உங்கள் நண்பர் உங்களிடம் முக்கியமான விஷயங்களை மறைக்கலாம் உங்கள் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் பொய் சொல்லலாம் இப்படி நேர்மை இல்லாமல் நடப்பவர்களின் நட்பை முடிவுக்கு கொண்டு வரலாம். உங்களிடம் நேரடியாக விஷயங்களை சொல்லாமல் உங்கள் நண்பர் உங்களைப் பற்றி புறம் பேசலாம் முதுகுக்கு பின்னால் புறம் பேசினால் அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஃபேஷன் உங்களுடைய தொழில் தேர்வுகள் தனிப்பட்ட வாழ்க்கை இவற்றை பற்றி உங்கள் நண்பர் அடிக்கடி தாழ்த்தி பேசினால் கவனமுடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் கேலி செய்தல் அவமரியாதை செய்வது போன்ற விஷயங்கள் உங்கள் சுயமரியாதை கெடுக்க வாய்ப்புள்ளது இது உங்கள் நண்பர் உங்கள் மீது வைத்துள்ள வெறுப்பை இது காட்டுகிறது. உங்கள் நண்பர் எல்லோருக்கும் நேரம் ஒதுக்கிவிட்டு உங்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்காமல் இருப்பது உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை காட்டுகிறது.உங்கள் வெற்றியைக் கண்டு உங்கள் நண்பர் பொறாமை கொண்டவராக இருந்தால் அப்பொழுது நட்பை முறிக்க வேண்டும் இந்த மாதிரியான நண்பர் உங்கள் சாதனையின் மீது பொறாமை கொண்டவராக இருப்பார்கள். மீண்டும் மீண்டும் உங்கள் நண்பர் உங்களை அவமதித்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. கீழ்தரமான கருத்துக்களை சொல்லுதல் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கவனிக்க வேண்டும். உங்கள் நட்பு முடிவுக்கு வரும் நிலையில் அதை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது இணைவதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது கவனிக்க வேண்டும்…!!