இன்றைய காலகட்டத்தில் நண்பர்கள் மூலம் வாழ்ந்தவர்களும் உண்டு அதே நண்பர்கள் மூலம் வீழ்ந்தவர்களும் உண்டு ஆனால் நண்பர்களை சரியான முறையில் தேர்வு செய்வதன் மூலம் நமது வாழ்வே அழகாக மாறும் என்று பெரியவர்களும் அனுபவத்தால் அறிந்தவர்களும் கூறுவது வழக்கம்…
“கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழியும் உண்டு”ஒரு நல்ல நண்பன் 100 நூலகத்திற்கு சமம் என்றும் பலரும் சொல்வார்கள், உங்கள் நண்பரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் சில கவனிப்புகள் மற்றும் உற்று நோக்கங்கள் இருக்க வேண்டும் உங்கள் நண்பர் உங்களை சரியான பாதையில் தான் நடத்துகிறார்களா என்று நீங்கள் அடிக்கடி கூர்ந்து கவனிக்க வேண்டும் நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் உங்கள் நண்பர் உங்களை திருத்துவதற்கு முயல்கிறார்கள் என்றால் அவர்கள் சிறந்த நண்பர்களை மேலும் உங்கள் கஷ்ட காலத்தில் உங்களுக்கு ஆறுதலாய் நின்று உங்களை தேடக்கூடிய நபர் சிறந்த நண்பர், மேலும் உங்களின் நண்பர் உங்களுக்கு சந்தோசம் துக்கம் எல்லாவற்றிலும் உங்களுடன் நின்று உங்களுக்கான சரியான தேர்வு முறையையும் சரியான வழிகாட்டலையும் சரியான நேரத்தில் தருவார் என்றால் அவர் சிறந்த நண்பர் மற்றும் தேவையில்லாத பழக்கங்களுக்கு உங்களை தள்ளுகிறார்கள் என்றால் அல்லது உங்களை வற்புறுத்தி செய்ய வைக்கிறார்கள் என்றால் அவர்கள் நண்பர்கள் அல்ல உங்கள் வாழ்க்கையை கெடுக்க வந்தவர்கள்..!!




