
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும் வேலை ஈசியாக்கவும் அசத்தலான கிச்சன் டிப்ஸ்..!!
தேங்காயை துருவி அதை கொதிநீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கைப்பொருக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும். வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டால் வெங்காய பக்கோடா சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும் போது மிருதுவாக இருக்கும்.
சாம்பார் தண்ணீராக இருந்தால் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டி படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும். தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால் நீண்ட நாள் வரை அழுகி போகாமல் இருக்கும். காலிஃப்ளவர் சம்பந்தமான உணவுகளை சமைக்கும் போது அதில் சிறிது பால் சேர்த்து சமைத்தால் பச்சை வாசனை மாறிவிடும்.