தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டுகள் அல்லது மின் துண்டிப்புகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது, இரவு நேரங்களிலும் அல்லது காலை நேரங்களில் மின் துண்டிப்பு ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் வழக்கமாகிவிட்டது தொடர்ந்து மின் துண்டிப்புகள் ஏற்படும் பொழுது இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், இதன் மூலம் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்..
தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மின்வெட்டுகள் மற்றும் மின் துண்டிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க பல வழிகள் உண்டு,9498794987 மற்றும் 1912 என்று எண்ணிற்கு தொடர்பு கொண்டு மின் சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம்,https://www.tangedco.org என்ற இணையதளத்தின் மூலமாக புகார்களை தெரிவித்துக் கொள்ளலாம், மேலும் TANGEDCO என்ற செயலியை பதிவிறக்கிக் கொண்டு அதன் மூலம் தங்களது சந்தேகங்களையும் புகார் களையும் தெரிவிக்கலாம், மேலும் ட்விட்டர் பக்கத்தில் எக்ஸ்-ட்விட்டர் வில் TANGEDCO official என்ற ஐடிக்கு டேக்ஸ் செய்து இதன் மூலம் மின்சார பற்றிய தகவல்களை புகார் அளிக்கலாம் மேலும் புகார் அளித்த ஓரிரு நாட்களிலேயே உங்களின் குறைகள் சரி செய்யப்படும்..!!