இன்றைய காலகட்டத்தில் சிம் கார்டுகள் இல்லாமல் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்த முடியாது அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் எத்தனை சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர் என்றும், மேலும் சிம் கார்டுகள் மூலமாக மோசடிகள் நடந்து வருவதையும் ஆங்காங்கே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், உங்கள் பெயரில் மற்றவர்கள் சிம் கார்டு வாங்கி பயன்படுத்துவதனால் சில நேரங்களில் பெரும் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறோம் அதனால் உங்கள் பெயரை எத்தனை சிம் கார்டுகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள இதனை செய்யுங்கள்..
முதலில் https://tafcop.sancharsaathi.gov.in/teleco-mUser/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும், திரையில் கேட்கப்படும் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளடக்கி அதற்கான otp யை பதவிறக்கி கொள்ளவும், பிறகு உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டுகள் இருக்கிறது என்று திரையில் தோன்றும், இந்த பட்டியலில் உங்களுக்கு தேவையில்லாத அல்லது பயன்படுத்தப்படாத எண்கள் இருந்தால் அதனை பிளாக் செய்ய வேண்டும் அல்லது அந்த நிறுவனத்திற்கு புகார் தெரிவித்து அதனை முடக்கம் செய்ய வேண்டும் இதனால் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும்..!!