உங்கள் மகிழ்ச்சியை மனதில் ஏற்றுங்கள் : மகிழ்ச்சியால் மட்டுமே மனதை மாற்ற முடியும்..!!

இன்பம் எங்கே இருக்கிறது தெரியுமா மனமகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் இன்பம் பெருகெடுத்து ஓடும் மனதை மகிழ்ச்சியாக வைக்க பயிற்சி இருக்கிறது தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து கொண்டிருந்தால் அதுவே பழக்கம் ஆகிவிடும்..

தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள் ஒரு வெள்ளை துணியை விரித்து அதில் சாப்பாட்டின் முன்னால் உட்காருவதை போல் உட்கார்ங்கள். முதுகுத்தண்டு நிமிர்ந்து சுகாசனத்தில் உட்காருங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணை மூடி உங்களுக்கு பிடித்தமான ஒரு சொல்லை அல்லது வாக்கியத்தை 21 முறை சொல்லுங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ வகையான இன்ப நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கும் அதில் ஒன்றை தேர்வு செய்யுங்கள் அந்த நிகழ்ச்சியை உங்கள் மன கணக்கில் கொண்டு வாருங்கள். அந்த நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? எவ்வாறு நடந்து கொண்டீர்கள்? யாரெல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள் என்று நினைவு கூறுங்கள். அன்று நிகழ்ந்து முடிந்த நிகழ்ச்சியை நிகழ் காலத்தில் காணுங்கள். அந்த நிகழ்வின் போது மனம் எவ்வாறு இருந்ததோ அதே உணர்வை உங்கள் மனம் மீண்டும் அடையுமாறு செய்யுங்கள். கண்ணை மூடுவதற்கு முன் இந்த நிலைக்கும் கடந்த கால நிகழ்வை கண்டபின் இருக்கும் மனதின் நிலைக்கும் வேறுபாட்டை கொண்டு வாருங்கள் இன்பத்தை மனதில் வைத்துக்கொண்டு இன்பம் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருந்தால் எப்படி கிடைக்கும் அடுத்து இன்பமான நிகழ்ச்சி மட்டும்தான் இன்பத்தை தருகிறது என்று நினைக்காதீர்கள் துன்பமான நிகழ்ச்சியும் இன்பமான சூழ்நிலையை மாற்றலாம். முன்பு கூறியது போலவே தரையில் அமருங்கள். நீங்கள் தவறாக நடந்தால் நிகழ்ந்த துன்பமான நிகழ்ச்சி உங்கள் மனக்கண் முன் காணுங்கள். அதில் நிகழ்ந்த தவறுகளுக்கு என்னவென்று உணருங்கள் அன்று நிகழ்ந்த தவறுக்கு வருத்தம் தெரிவிங்கள் உங்கள் தவறால் வருத்தம் அடைந்தவர்களை மனக்கண்ணால் பார்த்து அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள் இப்போது கண்ணை திறந்தாலே ஒரே அமைதியாக இருக்கும். உங்களுக்கு யார் மீது கோபமோ எரிச்சலோ அவரை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். உங்கள் கண் முன் தெரிகிற உருவத்துக்கு எவற்றெல்லாம் அலங்கோலமாக சித்தெரிக்க முடியுமோ அவ்வாறு செய்யுங்கள் அவரை வெகு தூரத்திற்கு விரட்டி அனுப்புவதை போல் கற்பனை செய்யுங்கள் விரட்டிய பிறகு கண்ணை திறக்க உங்களுக்குள் இருந்த எரிச்சல் கோபம் எல்லாம் குறைந்துவிடும். மேற்கூறிய பயிற்சிகளும் நீங்கள் செய்கின்ற செயல் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியாக செய்யுங்கள் உங்கள் மகிழ்ச்சிக்கு ஒத்துப்போகாத செயல்களை தவிர்த்து விடுங்கள் உங்களை சுற்றி நடக்கிற நிகழ்வுகளை கவனியுங்கள் அன்பின் மிகுதி அல்லது இன்பமாக தானே இருக்க முடியும்..!!

Read Previous

மட்டன் வைத்து இப்படி ஒரு கிரேவியா?.. மட்டன் லால் மாஸ்..!! செம்ம டேஸ்ட்..!!

Read Next

மழைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்குமா என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular