உங்கள் முகம் பளிச்சிட வேண்டுமா..? கஸ்தூரி மஞ்சளையும் கடலை மாவையும் இப்படி பயன்படுத்துங்கள்..!!

ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பெரிதும் ஆசை கொள்வார்கள். இதற்கு கெமிக்கல் நிறைந்த க்ரீம், ஃபேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கெமிக்கல்களை பயன்படத்துவதால் சருமத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் உள்ளனர். ஆபத்து நிறைந்த செயற்கைப் பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்

  1. கஸ்தூரி மஞ்சள்
  2. கடலை மாவு
  3. பன்னீர் (ரோஸ் வாட்டர்)

செய்முறை

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு கடலை மாவு மற்றும் அரை தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின் இரண்டு தேக்கரண்டி பன்னீர் (ரோஸ் வாட்டர்) சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

இதை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு பின்னர் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தோம் என்றால் முகம் அதிக பொலிவாக காணப்படும். வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க மஞ்சள் மற்றும் கடலை மாவு சிறந்த தீர்வாக அமைகிறது.

Read Previous

அல்சர் நோயினால் கஷ்டப்படுகிறீர்களா..? இதை ஒரே நாளில் குணமாக இந்த பானத்தை பருகினால் போதும்..!!

Read Next

சுவைநிறைந்த கேரள ஸ்டைல் எக் பேப்பர் ப்ரை செய்வது எப்படி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular