உங்கள் வாயைத் திறந்தாலே துர்நாற்றம் வீசுகிறதா..? அப்போ இதுதான் தீர்வு..!!

நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது வாய் துர்நாற்றம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேசவே தயக்கம் ஏற்பட்டுவிடும்.

வாயை திறந்தால் துர்நாற்றம் வந்துவிடுமோ என்று பயந்து பலரும் பேசாமல் அமைதியாய் உள்ளோம். வாயை திறந்தால் நாம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாதபடி அந்த அளவிற்கு நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.

சிலருக்கு பல் துலக்கினாலும் தொலைக்காவிட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படும். இந்த வாய் துர்நாற்றத்தை சரி செய்ய முடியாமல் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்

 • சைனஸ்
 • சிகரெட் பிடித்தல்
 • பற்களை நன்கு துலக்காதது
 • பற்களில் கரை இருத்தல்
 • நாக்கில் வெள்ளை படலம் படிதல்
 • பற்களில் வீக்கம்
 • வாய்ப்புண் பிரச்சனை
 • ஈறுகளில் வீக்கம் மற்றும் வலி
 • அல்சர்
 • தவறான உணவு முறை பழக்கம்

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்

 1. தினமும் காலை இரவு என இரு நேரங்களில் பல் துலக்க வேண்டும். பட்டை லவங்கத்தூள் கலந்த தண்ணீரில் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
 2. உணவு உட்கொண்ட பின்பு தண்ணீர் கொண்டு வாயை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பற்களில் சிக்கிக்கொண்டிருந்த உணவுத் துகள்கள் வெளியேறிவிடும்.
 3. வேப்பிலை பொடியில் பல் துலகினால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.
 4. தினமும் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.
 5. புதினா இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் .
 6. ஏலக்காய் சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் அகலும்.
 7. நாக்கில் படிந்துள்ள வெண் படலங்களை டான்ஸ் கிளீனர் கொண்டு சுத்தம் செய்வதால் வாய் துர்நாற்றம் சரி செய்யலாம்.
 8. அடிக்கடி பழங்களை உண்டு வருவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்

Read Previous

நமது குலதெய்வம் மனம் உருகி நமது வீட்டில் வந்து தங்க இந்த பரிகாரங்கள் செய்தால் போதும்..!!

Read Next

உங்கள் பாத்ரூம் டைல்ஸ்சில் படிந்து கிடக்கும் உப்பு மற்றும் மஞ்சள் கரையை பளிச்சிட இதை செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular