உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண் இருந்தால் அவளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

படித்ததில் பிடித்தது….

 

1- ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, அவள் சொல்வதில் பாதிக்கு மேல் அர்த்தம் இருக்காது. முடிந்தால், அவளை அமைதிப்படுத்துங்கள். மென்மையாக அவளை அணைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அந்த கோபத்தை முடித்து வையுங்கள்.

 

2- ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரம், அவள் உண்மையிலேயே மனதார நேசிக்கும் ஆணிடமிருந்து அவள் விலகி இருப்பதுதான். அவள் அப்போது மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

 

3- ஒரு பெண் ஒரு ஆணை நம்புவதற்கு நிறைய நேரம் எடுக்கும், அவள் மனதை மாற்றுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. பொறுமையாக இருங்கள். நீங்கள் நடுவில் ஏதாவது குழப்பினால், அவளை மறந்துவிட வேண்டியதுதான்.

 

4- பெண் என்னும் பள்ளியில் நீங்கள் எப்போதுமே பாஸாக(தேர்ச்சியாக) முடியாது.

 

5- அவள் உன்னை நேசிக்கிறான் என்றால், நீ அவளிடம் கேட்கும் அனைத்தையும் அவளால் செய்ய முடியும், உன்னை மகிழ்ச்சியாக வைக்க முடியம். ஆனால், உன்னை காதலிக்க வேண்டும் என, அவளை கட்டாயப்படுத்தாதே.

 

6- அவள் இப்போது மிகவும் கசப்பாக இருக்கலாம், பிற்காலத்தில் மிகவும் இனிமையான தேவதையாக மாறக்கூடும், இவை அனைத்தும் உங்கள் அணுகுமுறையில் உள்ளது. ஆம், அவளை எப்போதும் சரியாக நடத்துங்கள்.

 

7- ஒரு பெண் எதையும் மறப்பதில்லை, அவள் அனுபவித்த அதிக வலியை எப்போதும் நினைவில் வைத்திருப்பாள். அவள் காயப்படுத்துவதைத் தவிர்க்கிறாள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து, அவளை அவ்வப்போது மன்னிக்கவும் பழகுங்கள்.

 

8- ஒரு பெண்ணால் மிகவும் ரகசியமாக இருக்க முடியும். பெரும்பாலான நேரங்களில் ஆண்களால் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, தங்கள் அறைக்குச் சென்று நெருங்கிய தோழிகளிடம் அழுவார்கள். எனவே அவளை உங்களுக்கான சிறந்த தோழியாக பாருங்கள். மாற்றுங்கள்.

 

9- எல்லா பெண்களும் தன்னிடம் ஒரு ஆண் கெஞ்சுவதை விரும்புகிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் இதை தவறவிடுகிறார்கள்.

10- எல்லா பெண்களுக்கும் உப்பு போன்ற தனித்துவமான குணம் உண்டு, அவர்களின் இருப்பு கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இல்லையென்றால் அனைத்தும் சுவையற்றதாக போய் விடும்.

 

11- ஒரு பெண் உன்னை உண்மையாக நேசித்தால், உன்னிடம் பணம் கேட்பதற்கு கூட அவள் வெட்கப்படுவாள், ஆனால் ஒரு நல்ல மனிதன் அவள் கேட்பதற்கு காத்திருக்க மாட்டான், குறிப்பாக அவள் உன்னை நேசித்தால், அவள் உன்னை ஒருபோதும் தேவையில்லாமல் செலவு செய்ய விடமாட்டாள். இது அவர்களின் தனிச் சிறப்பு.

 

12- நீங்கள் அவளைக் கவனித்துக் கொள்ளாவிட்டாலோ, அவளை திரும்ப திரும்ப காயப்படுத்தினாலோ, அவள் விரும்பும் ஒருவரைக் கண்டுபிடிப்பாள். தேர்ந்தெடுக்கும் உரிமையை எப்போதும் வைத்திருப்பாள் ஒரு பெண்.

 

13- ஒரு பெண்ணுடனான உங்கள் திருமணச் சான்றிதழ் “ஓட்டுநர் உரிமம்” அல்ல, அது வெறும் “அனுமதி சீட்டு” மட்டுமே. அவள் மனதை கவர, தொடர்ந்து காதலில் இருக்க வேண்டும்.

 

உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண் இருந்தால், அவளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் மதிப்பு மிக்கவர்கள்.

 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு நல்ல நேர்மையான பெண் இருக்க வேண்டும்.

 

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.

 

🌹🌹

Read Previous

மனைவிக்காக பெற்றோர்களை ஒதுக்காதீர்கள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular