
இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது கிடைத்த நல்ல உறவுகளையும் அல்லது நல்ல சிந்தனைகளையும் எண்ணி நன்றி கூறுவது இல்லை ஆனால் நீங்கள் நன்றி கூறுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை அழகாக மாறும் என்பதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும்..
நீங்கள் தங்குவதற்கு உங்கள் தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் நீங்கள் நன்றி சொல்லி பழக வேண்டும், மூன்று வேலையும் உங்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கிறது என்றால் நீங்கள் நன்றி சொல்லு தான் வேண்டும், அதைத் தாண்டி அன்பான ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் நல்ல ஆரோக்கியம் இருக்கிறது என்றால் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் உங்களிடம் சுத்தமான ஆடைகள் உள்ளது என்றால் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நன்றி சொல்ல தான் வேண்டும் உங்களிடம் அன்பு செலுத்த யாராவது இருந்தால் கண்டிப்பாக நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் இன்று ஒரு புதிய நாளை காண்கிறீர்கள் என்றால் அதற்கும் நன்றி சொல்ல தான் வேண்டும், நன்றியில் தொடங்கக்கூடிய ஒவ்வொரு செயலும் புதிய வெற்றியையும் புதிய மாற்றத்தையும் தரும் சிறு சிறு விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள் சிலருக்கு நம்மிடம் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் கூட பிறருக்கு கனவாக இருக்கிறது..!!