நமது வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் மிக்ஸி. இதை வைத்து தான் மூன்று நேரமும் நமது சமையல் நிறைவு பெறும். ஆனால் மிக்ஸியை வாங்கிய போது எந்த அளவுக்கு சுத்தமாக இருந்ததோ அந்த அளவுக்கு இப்போது நிச்சயமாக இருக்காது. எவ்வளவு துடைத்தாலும் மஞ்சள் நிறம் மாறாமலேயே பல வீட்டில் மிக்ஸி இருக்கும். எப்படி மிக்ஸியை சுலபமாக சுத்தம் செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
நமது முகத்திற்கு உபயோகிக்கும் ஃபேஸ்வாஸை எடுத்து மிக்ஸியில் தேய்த்து பழைய டூத் பிரஸ் உடன் நன்றாக தேய்த்து டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்து எடுத்தால் மிக்ஸியில் இருக்கும் அழுக்குகள் சுலபமாக வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் பேஸ்ட் இருந்தால் அதனுடன் காய்ந்த முட்டை ஓடு பேக்கிங் சோடா வினிகர் ஆகியவற்றை மிக்ஸியில் தேய்த்து ஜாரை இயக்கினால் அதில் இருக்கும் அழுக்குகள் முற்றிலுமாக நீங்கிவிடும்.
இது இல்லாமல் பச்சரிசி புழுங்கல் அரிசி என ஏதேனும் ஒரு அரிசியை பேக்கிங் சோடா உடன் கலந்து மிக்ஸியை சுத்தம் செய்யலாம். நம்மிடம் இருக்கும் மாத்திரை அட்டையில் சில்வர் போன்று இருக்கும் அட்டையை குட்டி குட்டியாக வெட்டி ஜாரல் போட்டு இரண்டு முறை சுழற்றினால் ஜார் ஷார்ப்பாக மாறிவிடும்.




