
முன்பிருந்த காலங்களில் நமது வீடுகளில் சாதத்தை வடித்து தான் செய்வார்கள். ஆனால் இப்போது நிறைய வீடுகளில் பிரஷர் குக்கர் தான் பயன்படுகிறது. இந்த நவீன காலத்தில் யாருக்கும் சாதத்தை வடிக்கும் அளவிற்கு நேரமில்லை. பிரஷர் குக்கரை தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். இதில் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகளும் மிக அதிகமாகவே இருக்கிறது. ஒரு சில உணவுகளை பிரஷர் குக்கரில் சமைப்பது தவறாகும். அப்படி சமைத்தால் பல தீங்கு நேரிடும். அது என்னென்னவென்று இந்த பதிவில் காண்போம்.
உருளைக்கிழங்கு பாஸ்தா அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைத்தால் நமக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இதில் ரசாயனத்தை உண்டாக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. பிரஷர் குக்கரில் ஊட்டச்சத்து நிறைந்து இருக்கும் காய்கறிகளை சமைப்பதில் எந்த பிரச்சனைகளும் இல்லை.
ஆனால் அரிசி உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை சமைத்தால் புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறுகளையும் ஏற்படுத்தும் இந்த பிரஷர் குக்கர். அதேபோல இறைச்சி வகைகளை குக்கரில் சமைக்கலாம். அதனால் எந்தவித பிரச்சனைகளும் வராது.