
Oplus_131072
உங்கள் வீட்டு சமையலறையில் அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி எடுக்கவே கூடாது. உண்ணும் உணவிற்கே கஷ்டம் வந்துவிடும். ஒரு வீட்டிற்கு வாஸ்து என்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நம் வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை அந்தந்த இடத்தில் முறையாக வைப்பதும் அவசியம். முக்கியமான சில பொருட்களை சரியான இடத்தில் வைத்துவிட்டாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். அந்த வரிசையில் சமையலறையில் அரிசியை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றியும் அந்த அரிசியை தினம் தோறும் சமைப்பதற்காக எப்படி எடுக்க வேண்டும் என்பதை பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம். சில பேர் வீட்டில் அரிசியை மூட்டையாக வாங்கி வைப்பார்கள். சில பேர் வீட்டில் மூட்டையில் இருக்கும் அரிசியை உபயோகப்படுத்துவார்கள் சில பேர் அரிசி மூட்டையை சமையலறையில் வைக்காமல் பொருட்களை சேகரித்து வைக்கும் ஸ்டோர் ரூமில் வைத்திருப்பார்கள். சில பேர் அரிசியை அலமாரிகளில் வைத்திருப்பார்கள். இதுல உங்க வீட்டில் எந்த இடத்தில் அரிசியை வைத்திருந்தாலும் தரைப்பகுதியில் தான் அந்த அரிசியை வைக்க வேண்டும். உயரமான இடத்தில் வைக்க கூடாது. கையை தூக்கி உயரத்தில் இருந்து அரிசியை எப்போதுமே எடுக்கக்கூடாது. குறிப்பிட்டு சொல்லப் போனால் தினம் தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசியை சின்ன டப்பாவில் போட்டு சமையல் அடுப்பு திண்ணைக்கு கீழே வைத்துக் கொள்வது நல்ல பலனை தரும். அதாவது அன்ன லட்சுமியை நாம் ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் தலைவணங்கி தலை குனிந்து நமஸ்காரம் செய்து எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அரிசி மூட்டையை அடுப்புக்கு கீழ் உள்ள இடத்தில் வைத்து வந்தார்கள். ஸ்மார்ட் கிச்சன் என்று நம்முடைய நாகரீகம் வளர வளர சிலபேர் இந்த அரிசி வைக்கும் இடத்தையும் மாற்றிவிட்டார்கள். எக்காரணத்தை கொண்டும் உங்கள் தலைக்கு மேல் உள்ள அலமாரியில் அரிசியை வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த காலத்தில் எல்லாம் குதிர் என்று அரிசி சேமிக்கும் பானையில் அரிசியை கொட்டி வைத்திருப்பார்கள் உயரமான அந்த குதிரிலும் கீழ் பக்கத்தில் தான் கதவு இருக்கும் குனிந்து அந்த கதவை திறந்தால் கையை விட்டு விடலாம் .இருக்கும் முறையை முடிந்தவரை கடைபிடிக்கப் பாருங்கள். வீட்டில் எந்த ஒரு பஞ்சமும் ஏற்படாது என்ற தைரியத்தோடு நம் வாழ்க்கை நடத்தலாம். அடுத்தது அரிசியை அளப்பதற்கு டம்ளர் வைத்திருப்பார்கள் முடிந்தவரை ஆளாக்கு என்று சொல்லப்படும் ஒரு பொருளை அரிசி அளக்க பயன்படுத்துவது மிகவும் நல்லது. அந்த ஆழாக்கு எப்போதுமே அரிசி மூட்டையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.