
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள PF அக்கவுண்டில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை எவ்வாறு சீராக்க முடியும் என்பதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO போர்டல்:
நாட்டின் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கான ஓய்வு கால சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாதம் தோறும் ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் சார்பாக 12 சதவீத தொகையானது பிஎஃப் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு வசதிகளும் பிஎப் அக்கவுண்டின் மூலமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎப் அக்கவுண்டில் ஏதேனும் புகார்கள் இருப்பின் அதனை EPFO போர்டல் மூலமாக தெரிவிக்க வேண்டும். புகார்களுக்கான பதில்கள் தகுந்த அதிகாரிகளின் மூலமாக குறிப்பிட்ட காலத்திற்குள் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும்.
வழிமுறைகள்:
- https://epfigms.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Register Grievance என்ற பிரிவை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது தோன்றும் புதிய பக்கத்தில் பயனர்களுக்கான நான்கு விருப்பங்கள் அளிக்கப்பட்டிருக்கும்.
- அதை தேர்வு செய்து பயனர்களின் UAN மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
- இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
- இப்பொழுது தோன்றும் புதிய பக்கத்தில் தனிப்பட்ட விவரங்கள் பகுதியில் பிஎப் எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு குறைகளின் விவரங்களை தேர்வு செய்து பின்னர், சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்களின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- புகார்களுக்கு உரிய விளக்கம் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.