தற்போதைய சூழலில் ஆதார் என்பது முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த அட்டையானது இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்த எண் ஆனது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.
புகைப்படங்களை மாற்றுவதற்கு அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று என்ரோல்மெண்ட் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு அதனை பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் அங்கே பதிவு செய்த பின் அங்கேயே புகைப்படம் எடுக்கப்பட்டு அப்டேட் செய்யப்படும். இதற்கு ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.