உங்க கடிகாரத்தை இந்த திசையில் மாட்டிருக்கீங்களா?.. உடனே மாத்திடுங்க.. இதோ வாஸ்து டிப்ஸ்..!!

கடிகாரத்தை எந்த திசையில் மாட்டினால் செல்வம் பெருகும் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக கடிகாரம் இல்லாத வீடு இருக்காது. நம் தாத்தா பாட்டி காலம் தொடங்கி தற்போது வரை அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகவும் கடிகாரம் இருந்து வருகின்றது. விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட பல கடிகாரங்களை நாம் பார்த்திருப்போம். இன்றைய காலகட்டத்தில் செல்போன்களில் நேரம் பார்த்தாலும், பலரது வீட்டிலும் கடிகாரம் இருக்கின்றது. நம்முடைய வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும் சக்தி கடிகாரத்திற்கு இருக்கிறது. கடிகாரத்தை சரியான நேரத்தை காட்டும் வகையில் வைத்திருக்க வேண்டும். நம் நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி கடிகாரத்திற்கு இருக்கின்றது. கடிகாரம் என்பது ஒரு அலங்கார பொருள் கிடையாது. அது ஒரு உயிரோட்டம் உடையது. எப்போதுமே ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு பொருள்.

பொதுவாக ஓடாத கடிகாரமாக இருந்தாலோ, ரிப்பேரான கடிகாரமாக இருந்தாலோ அதனை வீட்டில் மாட்டி வைக்க கூடாது. கண்ணாடியில் விரிசல் விழுந்த கடிகாரத்தையும் மாட்டி வைக்க கூடாது. ஒரு சிலர் வீட்டில் கடிகாரத்தின் வேகத்தை அதிகம் ஆக்கி வைத்திருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் கடிகாரத்தை தாமதமாக ஓட வைத்திருப்பார்கள். பொதுவாக கடிகாரத்தில் சரியான நேரத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதிகபட்சம் 10 நிமிடம் வரை அதிகரித்து வைக்கலாம்.

ஆனால் லேட்டாக ஓட விடக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து பணவருமானத்தை குறைக்கும். பொதுவாக கிழக்கு திசையில் தான் கடிகாரத்தை மாட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று பல வாஸ்து வல்லுநர்கள் கூறுகிறார்கள். கிழக்கு திசை என்பது சொர்க்கத்தின் அதிபதி இந்திரனின் திசை. குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் இந்திரனுக்குள் அடக்கம் என்பது புராணங்களில் சொல்லப்படும் கதை.

நம்முடைய வீட்டில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்க கிழக்குப் பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்றி வைப்பது மிகவும் நல்லது. கிழக்கு பக்கம் சுவற்றில் மாட்டி வையுங்கள். பொதுவாக பெரும்பாலானவர் வீட்டில் வடக்கு திசையில் தான் கடிகாரத்தை வைத்திருப்பார்கள். வடக்கு திசை குபேர ஆளும் திசை என்று கூறுவார்கள். வடக்கு சுவற்றில் மாட்டும் கடிகாரம் தெற்கு பார்த்து இருக்க வேண்டும்.

வடக்கு சுவற்றில் கடிகாரம் மாட்டினால் அதனால் செல்வ வளம் பெருகும். பணக்கஷ்டம் நீங்கும். பொதுவாக கடிகாரம் வட்ட வடிவத்தில் இருப்பது அதிக பலனை கொடுக்கும். கிழக்கு மற்றும் வடக்கு பக்க சுவர்களில் கடிகாரத்தை மாற்ற முடியாதவர்கள், மேற்கு சுவற்றில் மாற்றலாம். தெற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைக்காதீர்கள். தெற்கு திசை எமனின் திசை என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.

தெற்கு திசையில் மாட்டி வைக்கும் கடிகாரம் நம்முடைய வரைந்த முன்னோர்களையும், எமதர்மராஜாவையும் தொந்தரவு செய்யக் கூடியது. நம்முடைய நேரம் நல்ல நேரம் என்பது உணர்த்துவது கடிகாரம் தான். படுக்கை அறையில் கதவிற்கு நேர் மேலே கடிகாரத்தை மாற்றக்கூடாது. வாசலுக்கு வெளியே பால்கனியில் கடிகாரங்களை மாட்டி வைக்க கூடாது. மேலும் பல இடங்களில் கடிகாரத்தை பரிசு பொருட்களாக தரலாமா என்று கூறுகிறார்கள். நம்மை விட குறைவான வயதுள்ளவர்களுக்கு, வீட்டில் விசேஷம் என்றால் கடிகாரத்தை பரிசாக கொடுக்கலாம். அதே நேரத்தில் நம்மை விட வயது அதிகமானவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக வழங்கக் கூடாது.

Read Previous

பல்லடம் அருகே கயிறு ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து..!!

Read Next

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இராணுவ வீரர் கைது..!! பெரும் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular