உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா?.. அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க..!!

பொதுவாகவே அனைவருக்கும் பணம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. பணத்தை எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் பெரும்பாலும் எந்த மனிதனுக்கு இருப்பது கிடையாது.

இந்தளவுக்கு பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆனால் இந்த பணம் ஒருவரிடம் கையிலும் நிரந்தரமாக சிக்கிவிடுவதே கிடையாது.

சாஸ்திரங்களின் அடிப்படையில் பணத்தை வசப்படுத்துவதற்கும் பணத்தை ஈர்ப்பதற்கும் பல்வேறு உத்திகள் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் உங்க பர்சில் பணம் எப்போதும் குறையாமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் லக்ஷ்மி தேவியே செல்வத்தை வழங்குவதாக நம்பப்படுகின்றது. அதனால் பர்சில் எப்போதும் லட்சுமியின் ஒரு சிறிய படத்தை வைத்துக்கொள்வதன் மூலம் பணத்தை வசியப்படுத்த முடியும்.

இதனால் லட்சுமியின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்க பர்சில் பணம் குறையவே குறையாது.மேலும் அதிக பணத்தை சம்பாதிக்ககூடிய வழிகளும் உங்களை தேடிவரும்.

தாமரை விதைகளை எப்போதும் பர்சில் வைத்திருப்பதால் நிதி நிலை சீராகும் என நம்பப்படுகின்றது.அது மட்டுமன்றி இந்த விதைளுக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது. இதனால் பணம் அதனை நோக்கி ஈர்க்கப்படும்.

அரிசி இந்து சாஸ்திரங்களில் மிகவும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகின்றது. அதனால் அரிசியை உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளும் போது பல்வேறு நன்மைகள் உங்களை தேடிவர ஆரம்பிக்கும். பணத்துக்கு வாழ்நாள் முழுவதும் தட்டுபாடு இருக்காது.

அது போல் பரிசில் எப்போதும் ஒரு நாணயமும் ஒரு பத்து ரூபாய் நோட்டும் வைத்துக் கொள்வதும் பணத்தை வசீகரிக்க பெரிதும் துணைப்புரியும்.அதை எக்காரணத்தைக் கொண்டும் செலவழிக்க கூடாது. இதனால் தொழில் ரீதியிலும் வியாபர விடயங்களிலும் எதிர்பாராத அளவு முன்னேற்றம் உண்டாகும்.

அதுபோல் லக்ஷ்மி யந்திரத்தை பர்சில் வைத்துக் கொள்வதால் பணம் உட்பட அனைத்து செல்வங்களையும் ஈர்க்க முடியும் என்பது ஐதீகம். இந்த பொருட்களில் ஒன்றை எப்போதும் பர்சில் வைத்துக்கொண்டால் பணப்பிரச்சினையே இருக்காது.

Read Previous

உடல் எடையை குறைக்க உதவும் ஐந்து உணவு பழக்க வழக்கங்கள்..!!

Read Next

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular