உங்க வங்கிக்கணக்கில் ரூ.456 பிடித்தம் செய்யப்பட்டதா?.. காரணம் இதுதான்.!!

வங்கிகள் அடிக்கடி அவர்களின் திட்டம் சார்ந்த விஷயங்களுக்கு நமது பணத்தினை பிடித்தம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் ஏடிஎம் கார்டு மற்றும் நமக்கு வழங்கும் எஸ்எம்எஸ் போன்றவைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட கட்டிணத்தை வசூல் செய்து வருகின்றனர். தனியார் வங்கிகள் அவர்களின் விதிமுறை கட்டணம் மாறுபாடுகளுடன் அதனை வசூல் செய்து விடுவார்கள். இந்த நிலையில் தற்போது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 436 மற்றும் ரூ 20 என்று மொத்தமாக ரூ 456 பணம் கழிக்கப்பட்டதாக பலரும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இது பிரதமரின் விபத்து காப்பீடு திட்டம் & ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பணம் பிடிக்கப் பட்டதாக வங்கிகள் தெரிவித்து  உள்ளனர். பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். உரிமைதாரர் விபத்து காரணமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ 2 லட்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பேண்டை அவிழ்த்து சாலையில் நடந்து சென்ற பெண் பலாத்கார முயற்சி; அதிர்ச்சி வீடியோ இணைப்பு.!!

Read Next

திருமணம் ஆகாத விரக்தியில், பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் தற்கொலை; சோடியம் நைட்ரேட் சாப்பிட்டு விபரீதம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular