உங்க வருமானம் அதிகரிக்கணுமா?.. அப்போ வீட்டு வாசலில் இதை வைத்தால் போதும்..!!

பொதுவாக திடிரென வீட்டில் பணப்பிரச்சனை வரும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நிதி நெருக்கடி ஏற்படும். என்ன காரணமென்றே தெரியாது.

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் செய்யப்பட வேண்டிய விதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் செல்வசெழிப்புடனும் வாழ்ந்தார்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டின் பிரதான கதவு மகிழ்ச்சி மற்றும் குடும்பத்தின் செழிப்பின் சின்னமாக பார்க்கப்படுகின்றது.

அது வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து கதவு என்று அழைக்கப்படுவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே பிரதான கதவை முறையாக பராமரிப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். பிரதான கதவை சுத்தம் செய்யாவிட்டால், லட்சுமி வீட்டிற்குள் நுழைய மாட்டார் என்பது நம்பிக்கை.

இந்த பொருட்களை வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் வைத்தால் பண பிரச்சனையே வராது என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்வத்தை அதிகரிக்கும் பொருட்கள்:

துளசி: செடியை வீட்டில் வைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷடத்தை தரும் எனக் கூறப்படுகிறது. பிரதான கதவுக்கு அருகில் இதனை வைப்பதால் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சிக்கல்கள் ஏற்படுவது குறையும்.

பூக்கள்: வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் பூக்களை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது. பூக்களுக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் வீட்டில் வசிப்பவர்களின் எண்ணங்களில் நல்ல மாற்றம் ஏற்படும்.

ஸ்வஸ்திக் சின்னம் : வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் சிவப்பு நிற ஸ்வஸ்திக் சின்னத்தை எழுதுவது மிகவும் நல்லது. நிதி ரீதியில் பாரிய வளர்ச்சியை கொடுக்கும்.

கலசம்: வீடுகளில் பூஜையின் போது மட்டும் கலசம் வைப்பது வழக்கம். ஆனால் வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் கலசத்தை வைத்தால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

விநாயகர் சிலை: அனைத்து தடைகளையும் கடக்கும் கடவுளாக விநாயகர் கருதப்படுகின்றார். எனவே வீட்டின் கதவுக்கு அருகில் விநாயகர் சிலையை வைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

Read Previous

இனி 20 போட்டோ..!! இன்ஸ்டாகிராமில் புது வசதி அறிமுகம்..!!

Read Next

ஷாக் : தமிழகத்தில் 13 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular