ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் முதலில் எந்த காரியமாக இருந்தாலும் குல தெய்வத்தை தான் வழிபட வேண்டும். பிறகுதான் இஷ்ட தெய்வங்கள் எல்லாம் அந்த வகையில் நம் வீட்டிற்கு குலதெய்வத்தின் அருள் இருக்கிறதா இல்லையா குலதெய்வம் தன் வீட்டில் உள்ளதா இல்லையா அப்படி குலதெய்வம் நம் வீட்டில் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குலதெய்வ ஆசீர்வாதம் இல்லை என்று நினைப்பவர்களும் வீட்டில் குலதெய்வம் இல்லை என்று யோசிப்பவர்களுக்கும் இந்த ஒரு எளிய விஷயத்தை தினமும் செய்து வருவதால் குல தெய்வத்தை எளிதாக வீட்டில் வரவழைக்கலாம். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வெறும் வாயை மட்டும் கொப்பளித்து முகம் கழுவி கொள்ளுங்கள். பிறகு நிலை வாசலில் சென்று வாசல் படியில் இரண்டு கற்பூரத்தை ஏற்றி வைக்கவும். கற்பூரம் முழுவதுமாக எரிந்து அணைந்த பின்பு நீங்கள் வழக்கம் போல் எல்லா வேலைகளையும் செய்ய தொடங்கலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் குலதெய்வத்தின் அருள் மற்றும் குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை ஆசீர்வதிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதுமட்டுமின்றி பூஜை அறையில் ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். மற்றும் அதன் பக்கத்தில் சிறிய கண்ணாடி ஒன்றை வைப்பதன் மூலம் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும்.