உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?.. இத ட்ரை பண்ணி பாருங்க..!!

பொதுவாகவே நம்முடைய வீடுகளில் அழிக்க முடியாத தொல்லைகளில் ஒன்றாக கரப்பான் பூச்சி இருக்கும். இதனை விரட்ட ஏராளமான ரசாயனம் கலந்த மருந்து பொருட்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால் அதனை வீடுகளில் பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால் இயற்கை முறையில் அதனை விரட்டி அடிக்கலாம்.

கரப்பான் பூச்சிகளை விரட்ட பேக்கிங் சோடா சிறந்ததாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து அதில் சிறிது சர்க்கரை சேர்த்து இந்த கலவையை கரப்பான் பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தெளித்தால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராது.

கரப்பான் பூச்சிகளை விரட்ட பலா இலை பொடியையும் பயன்படுத்துவது சிறந்தது. இதற்கு இலையை நன்றாக அரைத்து அந்த பொடியை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தூவினால் கரப்பான் பூச்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

கரப்பான் பூச்சியை விரட்ட பெப்பர் மின்ட் ஆயில் சிறந்தது. அதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் அரை கிளாஸ் பெப்பர்மின்ட் எண்ணையை கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் பயன்படுத்தினால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராது.

Read Previous

ஆண்களைவிட பெண்களுக்கு அதிக ஆசை இருக்க என்ன காரணம் தெரியுமா?..

Read Next

மத்திய அரசில் வேலை..!! தேர்வு கிடையாது..!! நேர்காணல் மட்டுமே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular