உச்சகட்ட போதையில் கால்வாய் அருகே படுத்து உறங்கிய நபர்..!! சடலம் என்று நினைத்து சென்ற தீயணைப்புத் துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அருகே ராஜாஜி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். அந்த மருத்துவமனையில் உள்ள பகுதி நிறைய மக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .

மேலும் இந்த ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டத்தில் உள்ள தென் மாவட்டங்களான தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக மக்கள் வந்து செல்வார்கள். இதனால் இப்பகுதி இரவு, பகல் என்று அனைத்து நேரங்களிலும் வாகனங்கள் வந்து போய்க்கொண்டிருக்கும். மேலும் இங்கு மருத்துவமனையின் அருகிலேயே ஒயின்ஷாப் ஒன்று இயங்கி வருகிறது .இதனால் இங்கு வரும் குடிமகன்கள் சில சமயம் குடித்துவிட்டு சாலையிலேயே படுத்து தூங்குவதை வழக்கமாய் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள கழிவு நீர் கால்வாய் அருகே ஒருவர் உச்சகட்ட போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து சடலம் என்று அதிர்ந்து போன மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் பெற்ற உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கால்வாய்க்குள் இருந்து முனகல்  சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அந்த நபர் மீட்கப்பட்டு தீயணைப்பு துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது மதுரை இளவனூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் அவரை குளிக்க வைத்து கூல்டிரிங்ஸ் வாங்கி குடிக்க வைத்து அனுப்பி வைத்துள்ளனர்.

Read Previous

கிடு கிடுவென உயர்ந்த கோயம்பேடு சந்தையின் காய்கறி விலைகள்..!!

Read Next

ரேஷன் பொருள்கள் டெண்டர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular