‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது’..!!

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்; ஒன்றுபட்ட இந்தியாவை கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டின் சான்று; ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவை நனவாக்கும் பணியை அசைக்க முடியாது என உறுதியளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Read Previous

ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் பணியிடங்கள்..!!

Read Next

ஊருக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular