
உச்சி முதல் பாதம் வரை தடையில்லா இரத்த ஓட்டம் சீராக நடை பெற்றாலே உடம்பில் நோய்களே இல்லாமல்
சீரான வளர்ச்சியையும் ,முழு செயல் திறனையும் காணமுடியும்
இதற்கு, நாம் ,இதயத்தையும், இரத்த குழாய்களையும் பாதுகாத்தல் அவசியம்
அவ்வகையில் ,
#காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது .இதில் பெருமளவு கரோட்டீன் உள்ளது
#தினமும் காலையில் 6சின்ன வெங்காயம் ,1பூண்டு சேர்த்து சிறிது எண்ணெய் வீட்டு வதக்கி சாப்பிடலாம்
#தேனில் ஊறிய பேரீச்சம் பழம் இதயம் வலிமை பெற உதவும்
#இதய தமணியை அடைப்புகள் இன்றி காத்திட காரட் மற்றும் கொள்ளு ரசம் சிறந்தது
#முருங்கை கீரை சாற்றைசூப்பாக செய்து வாரம் 1முறைஅருந்துதல் நல்லது
#100மி .லி பாலில் 25கிராம் பூண்டு தட்டி போட்டு வேகவைத்து அருந்தலாம்
#செம்பருத்தி பூ மற்றும் வெள்ளை தாமரை பூவிதழ்ழுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனை வெல்லம்
சேர்த்து அருந்தலாம்.
வலிமையான இதயம் இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.