இன்றைய காலகட்டங்களில் பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை நெஞ்சு சளி இருப்பது எளிதான ஒன்றாகிவிட்டது சிலருக்கு நெஞ்சு சளி பிடித்தால் மூச்சு திணறல் கூட ஏற்படுகிறது..
நெஞ்சு சளியை முறிக்கும் கற்பூரவள்ளி கசாயம், மழை காலம் தொடங்கிவிட்டது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை நெஞ்சு சளி பிடித்து விடும் இதனால் பலரும் அவதிப்படுவது வழக்கம், இதனை சரி செய்ய கற்பூரவள்ளி இலை, துளசி, மிளகு, மல்லி விதைகள் ஆகியவற்றை 100 மில்லி அளவில் தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்ட காட்சிய பின்பு அதனுடன் சிறிய பணக்கற்கண்டு சேர்த்து அருந்தி வர வேண்டும், இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சேர்த்துக் கொள்வதனால் நெஞ்சு சளி விரைவில் குணமடையும் என்றும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த வழிவகுப்பு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!