
இன்றைய காலகட்டத்தில் பலரும் சாப்பிடும் பொழுது காய்கறிகளை ஒதுக்கி வைப்பது வழக்கம், நாம் சாப்பிடக்கூடிய காய்கறிகளின் மகத்துவத்தை தெரிந்து கொள்வதே இல்லை அதனின் மகத்துவத்தை தெரிந்து கொண்டு இனி காய்கறிகளை ஒதுக்காமல் சாப்பிடுவோம்..
சாம்பல் பூசணிக்காயின் மகதத்தை தெரிந்து கொள்வோம் : உடலை வலுப்படுத்தும் தன்மை கொண்டவை நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்று புண்கள் வயிற்று எரிச்சல் பித்த நோய்கள் சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்தும், உடல் பருக்காது உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது, திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களை குணப்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது, உடலின் வெப்பம் தனியாவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது, அவரக்காய் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம் : அவரக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் பித்தம் குறையும், அவரைக்காய் அதிகம் உண்டு வந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும், ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால் இதனை ரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது, அவரைப் பிஞ்சில் துவர்ப்பு சுவை உள்ளதால் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம் தலைச்சுற்றல் கை கால் வலி மருத்துவல் போன்றவை சரியாகும்…!!