
உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வருவதற்கான காரணம் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி நடைபெறுசி போன்றவற்றை ஒரு சிலர் மேற்கொள்கின்றனர். இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு செயல்தான். இருப்பினும் சமீப காலகட்டமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். என பல செய்திகள் நம் காதில் கேட்கிறது. இதனால் மக்கள் மனதில் உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு வருமா என்கிற கேள்வி எழும்புகிறது. இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உடற்பயிற்சி என்பது இதயத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்வதற்கு மிகவும் உதவுகிறது. இருப்பினும் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்பு உள்ளவர்கள் சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் கொண்டவர்கள் அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது தான் முக்கிய காரணம். அதேபோல் உடற்பயிற்சிக்கு புதிதாக சேர்ப்பவர்கள் உடனடியாகவே வேகத்தை அதிகரித்து செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்படும் போது கண்டிப்பாக மார்பு வலி தலைச்சுற்றல் அல்லது மூச்சு திணறல் போன்ற பிரச்சனை ஏற்பட்டு உயிருக்கே அபாயம் ஏற்படும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உடலுக்கு ஏற்றவாறு பயிற்சியை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக மருத்துவரை ஆலோசனை செய்துதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.