நமது உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதை உணர்த்தும் ஆறு அறிகுறிகள் அவசியம் படிக்க தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..
தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அப்படி இருக்க தண்ணீரின் தேவை நமது உடலுக்கு மிகவும் அவசியம் நமது உடன் தண்ணீரால் நிறைந்த தண்ணீர் குடிப்பதனால் நமது உடல் நலமாகவும் ஆரோக்கியமாகவும் பயணிக்கும். உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்பொழுது உடலில் தேவையற்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது..
நமது உடலில் 70% க்கு மேல் தண்ணீரால் நிறைந்தவை. தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் உடலில் தோன்றும் ஆறு அறிகுறிகள். உடலில் தண்ணீர் குறைவாக இருந்தால் வாயிலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பிக்கும் இதை வைத்தே நமது உடல் தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். நீரிழப்பு காரணமாக உடலில் ஆற்றல் அளவு குறைந்து மனம் மந்தமாகிவிடும் தொடர்ந்து சோர்வு மற்றும் ஒரு விதமான அமைதியோடு இருப்பதன் மூலம் நமது உடலில் தண்ணீர் பற்றாக்குறை என்பதை அறிந்து கொள்ள முடியும். உடலில் நீர்ச்சத்து குறையும்போது மீண்டும் மீண்டும் தாகமும் பசியும் ஏற்படுத்து தொடங்கும் இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். உடலில் நீர் சத்து குறைவாக இருக்கும் போது சருமத்தில் வறட்சி அதிகரிக்கும் சருமத்தில் வறட்சி மட்டுமில்லாமல் சருமம் பொலிவற்று சோர்வாக காணப்படும் இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம் மேலும் சருமத்தில் தொடர் வெளிர் நிறம் தோன்றினாலும் உடலில் தண்ணீர் பற்றாக்குறையாகவும் இரத்தம் குறைவாக உள்ளதாகவும் தெரிந்து கொள்ள முடியும். உடலில் நீர்ச்சத்து குறைந்த உடன் ஒருவர் மிகவும் சோர்வாக உணர்வார்கள். சிறுநீரின் இருண்ட அல்லது மஞ்சள் நிற நீர் போக்கின் அறிகுறியாகும் இதை வைத்து நமது உடலில் தண்ணீர் பற்றாக்குறையை அறிந்து அதற்கு ஏற்ற தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம்..!!