உடலில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி..!! லேப்டாப் சார்ஜ்போடும்போது விபரீதம்.!!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற விடுதியில் தங்கி இருக்கும் பயிற்சி மருத்துவர் சாரணீதா (வயது 32) இவரின் கணவர் உதயகுமார் நாமக்கல்லை பூர்வீகமாக கொண்ட சாரணீதா தற்பொழுது பயிற்சியின் காரணமாக சென்னையில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது உடலில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாய் சாரணீதா உயிர் இழந்துள்ளார். மனைவிக்கு நீண்ட நேரம் தொடர்பு கொண்ட கணவர் அவர் போன் எடுக்காத காரணத்தால் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார், அவர்கள் விடுதிக்குள் சென்று பார்த்தபோது சாரணீதா கையில் சார்ஜரை பிடித்தவாறு மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினார்  காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சாரணீதா  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சென்னை விரைந்து வந்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் சாரணீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read Previous

தலைகுப்பற கவிழ்ந்த டிராக்டர்..!! கணவர், பச்சிளம் குழந்தை முன் தாய் துள்ளத்துடிக்க பலி.!!

Read Next

“குடிக்க மட்டும் பயன்படுத்துங்க..!!” தண்ணீர் பற்றாக்குறையால் காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய சென்னை மக்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular